அம்மா

பாலூட்டும் திங்கள்
சோறூட்டும் அண்ணம்- நீர்க்
குமிழ் தேற்றி
உயிர் தந்து
உடல் சேர்த்த தெய்வம்
ஓராண்டு சொந்தம்
இருள் தந்த இன்பம் -உன்
நிழல் தாண்டி னால் கூட
எங்கெங்கும் துன்பம்
உலகில் எல்லாமே
நீ என்றாகும்
உலகே உன் கருவாகும்
உள்ளம் ஒருகோடி
கோயில் ஆகும்
உன் அன்பே
வரமென்றாகும்
கந்தல் துணி தெய்வம்-நீ
எந்தன் அம்மா
சொந்தம் ஒன்றல்ல
நூறும் சும்மா
உந்தன் கை கோர்த்து
சென்றால் அம்மா
லட்சம் பல லட்சம்
தடைகள் சும்மா
கண்ணில் கரை வெல்லும்
கண்ணீர் அம்மா
உந்தன் மடி சாய
எல்லாம் சும்மா
ஒற்றை ஒரு சொல்லில்
எல்லாம் என்றால்
உந்தன் பெயர் சொல்வேன்
அம்மா அம்மா.