காதல் முல்லை மலரல்ல 555

காதல்...
மலர்கள் இரவில் பூத்தாலும்
காலையில் மலர்ந்தாலும்...
மலர்களின் அழகிய
சிரிப்பில்...
அதோடு இருக்கும்
முட்கள் தெரிவதில்லை...
முள்ளின் மீது இருக்கும்
பனித்துளி போலதான் காதலும்...
காதலில் வரும் துன்பங்கள்
தெரிவதில்லை அவ்வளவாக...
காதல் வரும்
பருவத்தில்...
வீச்சறிவாளின் வேகம்
கத்தியின் கூர்மை...
முள்ளின் வலி எல்லாம்
தோற்று போகும்...
மறந்துவிடு என்று அவன்{ள்}
சொல்லும் போது...
உணர்வாய் வலிகள்
என்னவென்று...
காதல் முல்லை மலரல்ல
முள்ளிருக்கும் ரோஜா...
பார்த்து ரசிக்கலாம் பறிக்க
நினைத்தால் வலிதான்...
வலிதாங்கும் உள்ளம்
இருந்தால் காதல் வசப்படும்...
இல்லையேல்
பார்த்து ரசி...
காதலை மலர்களை போல.....