என்னுயிரின் காதல் வரிகள்-சகி

@@என்னவனின் வரிகள் @@
என் சகியே ....
உன்னை உள்ளத்தில்
சுகமாக சுமக்கிறேனடி ...
வந்தடைந்தாய் என்னை ...
என் வாழ்க்கை என்னும்
நதியில் .....
காதல் கரம்கொண்டு
உன்னை அணைத்துக்கொள்வேன் ...
என் வாழ்க்கை
என்னும் நதியில் ...
மேடு பள்ளம் போல
துன்பம் வந்தாலும்...
சமதளத்தில் ஓடும்
நதியை போல்...
என்றுமே
சந்தோஷ வானில்
உன்னை அழைத்து
செல்வேனடி சகிய
என்றுமே நானிருப்பேனடி
உன்னுடன்...
நீ கடந்து செல்லும்
பாதையில் முதல்(பூ ) படியாக ...