கடவுள்
யேசு
மனிதர்களை உய்விக்க மனதில் உறுதி கொண்டு
மாட்டு கொட்டகையில் மகவு ஒன்று பிறந்தது
மாபெரும் கருத்துகளை மக்களுக்கு கொடுத்தது
மறுப்பேதும் சொல்லாமல் மரணத்தை ஏற்றது
மண்ணின் இனதோர் கொண்டாடமறுபடிஎழுந்தது
மெய் நானென்று மேன்மையுடன் விளங்குகிறது ......
கடவுள்
கண்ணுக்கு தெரியாத கருணையின் வடிவம்
காலத்தால் அழியாத மெய்யான உருவம்
கருத்தினில் கலந்திட்ட கலையாத காவியம்
கற்பனைக்கு எட்டாத அற்புத ஓவியம்
காண்போரின் கண்களில் தோன்றிடும் ஒளிசுடர்
உணர்தொரின் உள்ளிருக்கும் உண்மை பொருள்
கல்லில் இருந்து அருள்தரும் கருணை கடல்
மெய்ஞான பரம்பொருள் ......
கடவுளன்றோ