திசம்பர் திங்கள் 26ஆம் நாள்
..."" திசம்பர் திங்கள் 26ஆம் நாள் ""...
தரணிக்கு படிப்பினை தரவே
இயற்கையின் சீற்றமென்றும்
இறைவனின் நியதிமென்றும்
சத்தியம் விளங்கியிருந்தும்
சாதாரண மனிதத்தின் நெஞ்சம்
சிதைந்துபோகியே இருக்கின்றன !!!
அழகிய கடற்க்கரை
ஆனந்தமாய் விளையாடிய
அலைகளின் ஆரவாரம்
ஆசையாய் துளிக்குதித்து
மணல் வீடுகள் கட்டியே
மகிழ்ந்திருந்த குழந்தைகள் !!!
கரையோரம் வாழ்வோரின்
வாழ்க்கையின் ஆதாரம்
வற்றாத கருவூலமாய்
அன்றாடம் அள்ளித்தந்து
வயிற்றுக்கு உணவளித்த
பொக்கிசத்தின் உறைவிடம் !!!
திரைகடலோடி திரவியம்தேடா
திரைகடல் உன்னிடமே
அடைக்கலமாகி அனுதினமும்
அலைந்து வந்த எங்களிடம்
முன்னறிவிப்பில்லா உன்வரவு
அது நித்திரையின் பின்னிரவு !!!
பத்தாண்டுகளுக்கு முன்னால்
திசம்பர் திங்கள் இந்நாள்
சினத்தின் கரம் நீட்டியே
நீ சீரிப்பாந்து வந்ததனால்
சிதைந்தேதான் போகின பல
குருவிகளின் சிறு கூடு !!!
அன்னையென்று அழைத்து
நித்தம் ஆராதித்த எம்மை
பதுங்கிப்பாயும் புலிபோல
ரவுத்திர ஆழிப்பேரலையாய்
எங்கள் சந்ததிகளை அழித்தே
நீ சரித்திரம் படைத்தாய் !!!
சினம்கொண்டு சீறிப்பாய்ந்து
சிரிக்கும் உள்ளம் சிறைபிடித்து
சிரச்சேதங்கள் செய்யப்பட்டு
மூச்சுத்திணறி மூச்சடக்கிய
உயிர்கள் பல இன்னுமுன்னில்
மீட்க்கபடாமலே போய்விட்டன !!!
பத்து ஆண்டுகள் ஆனபின்னும்
பந்த பாசம் இழந்து நிற்கும்
பரிதவிக்கும் பட்டமரங்கலாம்
சொந்தத்தின் நினைவுநாளிலை
என்றும் நினைவில் மறையாத
இன்றும் மறக்கமுடியாத நாள் !!!
தரணிக்கு படிப்பினை தரவே
இயற்கையின் சீற்றமென்றும்
இறைவனின் நியதிமென்றும்
சத்தியம் விளங்கியிருந்தும்
சாதாரண மனிதத்தின் நெஞ்சம்
சிதைந்துபோகியே இருக்கின்றன !!!
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...