எழுத்துகாம்-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது-2014
தோழர்களே
வணக்கமும் வாழ்த்தும்.
நலமாய் உள்ளபோதே 2014ம் ஆண்டின் விருதுகளை அறிவித்திட ஆசை. 2012ல் தொடங்கினேன்-ஊக்குவித்திடவே. பலரும் இன்று முன்னணியில் உலா வருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இப்போது தளத்தின் என் போற்றுதலுக்குரிய வணக்கத்துக்குரிய இருவர் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகின்றனர்
ஒருவர் பழந்தமிழ் மீட்டெடுப்பு மாமணி மருத்துவர்.கன்னியப்பன் .எந்த மதிப்பெண் மற்றும் கருத்துக்களைப் பற்றி சற்றும் கவலைபடாமல் தன கடன் பழந்தமிழ் வகைமைகளை தளத்தில் பிறர்-குறிப்பாக தொடக்க நிலை படைப்பாளிகள் -பயன் அடைய பதிந்து வருவதையே சேவையாக ஒரு வேள்வியாக செய்து வருபவர். மரபிலும் பிறருக்கு உதவி செய்து ருப்பவர். ஆங்கில புலமையாக்கம் நிரம்பியவர்.ஈரோடு தமிழன் விருது பெற்றவர். .தளத்தில் பலருக்கும் வழிகாட்டி .
எனவே தோழர் மருத்துவர் கண்ணியப்பனுக்கு "எழுத்து.காம்-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது-2014 " அளித்து வணங்குகிறேன்.
வாழ்க பழந்தமிழ் மீட்டெடுப்பு மாமணி