அம்மா ஏன் என்னை பிரிந்தாய்

வார்த்தை மோதலில்
வளைந்து போனதா உன்
வானவில் கரங்கள் ,,,,,,,,
நிறம் மாறி திகைக்கின்றன .........
தூரம் பிரிவில்லை என்றாயே
தொலைந்து போன எனக்கா?
தொலைத்துவிட்ட உன் கைகளுக்கா?
உயிராய் நேசித்த என்னை - உதறி
விட்டு போக எப்படி முடிந்தது ???
நான் அழுகிறேன் ..........
கண்ணீர் வரவில்லை ,
நான் படுக்கிறேன்.............
தூக்கம் வரவில்லை,
ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது ........
நீ உன் இதய கருவில்
கல்லறை காட்டிவிட்டாய் - எனக்கு

(என்னை பிரிந்த என் அருளம்மாவுக்கு அர்ப்பணம் )

எழுதியவர் : (27-Dec-14, 6:22 pm)
பார்வை : 107

மேலே