அவள் நாணம் - சோம பானம்

நாணம் சோம பானம் ..!

தலைகுனிந்து இதழ்சிவந்து
தவிகின்றாய் தாகத்தால்
பார்த்தொரு தருணத்தில்
பத்திவிட்டாய் கண்மணியில்..

கொண்டைக்கு பூவைத்து
கொசுவத்தை நீசொருவ
சிகைகொண்ட அலங்காரம்
சிந்தனையைத் தூண்டுதடி..

தினம்தோறும் வருகின்றாய்
திசைபார்த்து நிற்கின்றாய்
கொடிதாங்கும் இடையாலே
முடிபோட்டு வைக்கின்றாய்.!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (27-Dec-14, 6:55 pm)
பார்வை : 139

மேலே