எழுத்துப் போராளி-2014 -விருது
தோழமை உள்ளங்களே
வணக்கமும் வாழ்த்தும்
2015ஆம் ஆண்டின் முதல் விருதாக "எழுத்துப் போராளி-2014 "-விருது இருவருக்கு அளிப்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். மன நிறைவு அடைகிறேன்
எனக்கு மிக மனநிறைவு அளிக்கும் படைப்புகளை இந்த சமுதாய ஏற்றத்திற்கும்
மாற்றத்திற்குமாக தொடர்ந்து எழுத்து.காம் வாயிலாகவும் வெளி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் அளித்து வரும் இவர்களின் செயற்பாடுகளில் நான் மெய் சிலிர்த்தது உண்டு.
தோழர் பொள்ளாச்சி அபி
தோழர் நிலா சூரியன்
இந்த இருவரும் தமிழ் கூறும் நல்லுலகில் நாளை பேசப் படுவர். அப்போது இந்த தளமும் நாமும் சேர்ந்து இவர்களால் பேசப்படுவோம்.
வாழ்த்துவோம் இவர்களை