புல்லின் மீது ஒரு பனித்துளி 555

வாழ்க்கை...

அலைகள் இல்லாத
கடலும் இல்லை...

பிரச்சனைகள் இல்லாத
வாழ்க்கையும் இல்லை...


இரவில் புல்லின்மீது
பனித்துளி சுமையாக அமர்ந்தாலும்...

பயணம் தொடர்வது
விடியலை நோக்கி...

உதிக்கும் காலை
கதிரவன்...

சுமையை நீக்கும்
என்னும் நம்பிக்கையில்...

சுமைகள் இல்லாமல்
வாழ்க்கையும் இல்லை...

வலிகள் இல்லாமல்
சந்தோசங்களும் இல்லை...

புல்லின் சுமையும் அழகு
நாம் காணும் போது...

நம் சுமையும்
அழகுதான்...

சந்தோசமாக நாம்
எதிர்கொள்ளும்போது...

சுமைகளையும் சுகமாக
எதிர்கொள்வோம்...

நம் வாழ்வில்...

பனித்துளியை தாங்கும்
புற்களை போல.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (28-Dec-14, 3:48 pm)
பார்வை : 184

மேலே