நல்ல மனைவியும் நீ தானடி
என் கவிதைக்கு உயிர்
கொடுத்த கடவுள்
நீ தானடி.
என் காதலுக்கு சுகம்
கொடுத்த அன்பானவள்
நீ தானடி..
என் உடலுக்கு உணர்வு
கொடுத்த உத்தமி
நீ தானடி.
என் பிள்ளைக்கு உறவு
கொடுத்த தாய்மை
நீ தானடி.
என் வீட்டிற்கு வெளிச்சம்
கொடுத்த விளக்கும்
நீ தானடி..
என் பசிக்கு உணவு
கொடுத்த தாயும்
நீ தானடி.