என் காதல் கணக்கு நீ
காதலியாய் உன்னை
கணக்கில் கொண்டு
கவிதையாய் வரைந்தேன்
காதல் கடிதம் உனக்கும்.
காதலனாய் என்னை ஏற்று
காதலித்து விடு என்னை நீ
என் காதல் கணக்கில் நீயும்
கணக்காய் ஆகி விடு .
கண்ணும் கருத்துமாய்
என் கண்ணில் வைத்து
உன்னை காத்திடுவேன்
என் காலம் உள்ளவரை..