சொல்லாத அவன் காதல் -சகி
அன்பே ..
சொல்லாமலே என்னை
உன் மனதில் சுமந்தாய் ...
காதலியாக....
நீ கொடுக்கவந்த மலர்கள்
நான் சூடாமலே வாடின தினம்
வாங்க மறுத்த காரணத்தால்....
வீடுவரை வருவாய்
வாசலோடு சென்றுவிடுவாய் ...
உன் காதலை நான்
அறித்ததோ உன் பெயர்
கொண்டு உன் நண்பர்கள்
என்னை அழைத்ததால் ...
வார்த்தைகள் இல்லை
நம்மிடம் பேசுவதற்கு ...
பார்வையில் பேசிசெல்வாய்
உன் காதலை ...
நீ சொல்லவில்லை என்றாலும்
உன் காதலை உணராமல்
நானில்லை ...
ஆண்டுகள் பலகடந்துவிட்டது
மனதில் மறையவில்லை
உன் நினைவுகள் ...
மறையாத காதலும்
உன் முகமும் என்றும்
மறக்கபோவதில்லை ...
ஆண்டு சில கடந்து
என்னை சந்திக்க மௌனமாகவே
நின்றாய் உன் காதலை
மனதில் சுமந்துக்கொண்டு ...
சொல்லாத காதல்
என்றுமே சுகம் தானே ...
உண்மை காதலில்....
உணர்கிறேன் உன் காதலை
இன்றும்....
இன்று வேறொருவளை
மனைவியாக மனதில் சுமப்பாய்
வாழ்த்துக்கள் அன்பே ...