பிறந்தது புத்தாண்டு வெண்பா

கதிரவனைச் சுற்றும் கடமையில்
பூமி புதிய கணக்கில் புகுந்தது,
உதித்திடும் ஞாயிறு போலே
நிமிரட்டும்
இவ் இரண்டாயிரத்துப் பதினைந்து!

[இருவிகற்ப நேரிசை வெண்பா]

ஒரு இயற்பியலாளனாய் என்வரையில் ‘புத்தாண்டு’ என்பதன் பொருள் இது மட்டும்தான் - பூமியானது சூரியனைக் கணக்கில்லாமல் சுற்றிச் சுற்றி வருகிறது... இதில் பூமியின் நீள்வட்டச் சுற்றுப்பாதையில் ஏதோ ஒரு புள்ளியை நாம் அடையாளமாகக் கொண்டு, அந்தப் புள்ளிக்கு மீண்டும் வருவதைப் புத்தாண்டாய்க் கொண்டாடுகிறோம்... (பூமி தொடங்கிய அந்த உண்மையான ’புத்தாண்டு புள்ளி’ நம்மால் அறிய இயலாதது! எனினும் வெவ்வேறு கலாச்சாரத்தில் வெவ்வேறு காரணங்கள்பற்றி வெவ்வேறு புள்ளிகள் புத்தாண்டாய்! “பொழுது” போகதவர்கள் அதைப் பற்றிச் சண்டைகூடப் போட்டுக்கொள்ளலாம்!)

அப்படி ஒரு கணக்கில்
ஒரு புத்தாண்டுப் புள்ளியில்
பூமி இதோ மீண்டும் வருகிறது,
2015 (இரண்டாயிரத்துப் பதினைந்து - கச்சிதமான வெண்பா ஈற்றடியாய்!) மலர்கிறது...

உதிக்கின்ற ஞாயிறைப் போல
அது நம் வாழ்வில் வண்ணமயமாய்,
புதிய எண்ணங்கள்,
அவற்றைச் செயல்படுத்த
புதிய ஆற்றல்கள்,
அதற்கு உதவ
புதிய தோழமைகள்
அதன் பலனாய்
புதிய எல்லைகள் தருவதாய்
அமைய வேண்டி விழைகிறது பாடல்...

/கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்.../

ஓம் ஓம் ஓம்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

நட்புடன்,
விஜய் :-)

எழுதியவர் : விஜயநரசிம்மன் (30-Dec-14, 9:24 pm)
பார்வை : 1292

மேலே