புனையாத கவிதை

புனையாத கவிதை

வலைத்தளங்கள்..
வார மலர்கள்..
வருடக் கணக்காய்
துழாவியதில்
கிடைத்தது..
உன் கவிதை..
நம்மைப் பற்றியதுதான்..
வேறொரு புனைப் பெயரில்!
அது சொல்லிய முகவரி
கண்டு பிடித்து
உனைக் கண்டு போக மட்டுமே
ஆசை..கொண்டேன்..
முல்லை கொடியை
முள்ளால் கீற மனமின்றி
தவிர்த்தேன்!
நான் புனையாத கவிதை ..
வாழ்க வளமுடன்!

எழுதியவர் : கருணா (31-Dec-14, 1:57 pm)
பார்வை : 126

மேலே