சூப்பர் நகைசுவை
டைப்பிஸ்ட் வேலைக்கு வந்திருக்கே… எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா..?
-
நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ் டைப்
பண்ணுவேன் சார்..!
-
===================================================
-
ஏம்பா சர்வர்…சாம்பார்ல பல்லி விழுந்திருக்கே…என்ன அர்த்தம்?
-
ரொம்ப ஸாரி சார்…எனக்கு பல்லி விழும் பலன் எல்லாம்
சொல்லத் தெரியாது..!
-
=======================================================
-
போதை ஊசி போடணும் டாக்டர்…”
-
“என்னது… போதை ஊசியா?”
-
“நர்ஸ் கையால ஊசி போட்டுக்கிட்டா, அது போதை ஊசிதானே டாக்டர்..!”
-
========================================================
-
“படம் போட்டதும் எல்லோரும் தும்முறாங்களே… ஏன்?”
-
மசாலாப் படமாச்சே…. அதான்!”
-
========================================================
-
பூனை எல்லா பாலையும் குடிச்சிருசு…அது வரைக்கும் என்னம்மா பண்ணிக்கிட்டு
இருந்தே..?
-
இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா-னு பார்த்துக்கிட்டே இருந்தேம்மா..!
-
============================================================
-
சே…என் பையன் செஞ்ச காரியத்தால வெளியே தலை காட்ட முடியலை..!
-
அப்படி என்ன செஞ்சுட்டான் சார்..?
-
என்னோட ‘விக்’ கை குப்பையிலே போட்டுட்டான்..!
-
=============================================================
-
நன்றி: ராம்மலர் .வோர்ட்ப்றேச்ஸ் .கம