சரித்திரக் குறியீடு

காட்டுக்கூச்சலில் இரைகின்ற
கடலலைகளின் குரலாய்
நேற்றும் இன்றும்
மாறிவிடாத
தவமொன்றின் மௌனங்களாய்
நாம் ...

மேகங்காள் மெய்வருத்தத்
தருங் கூலியென
சில்லரைக் கோடிகளின்
பெருமழையொன்று - கூட்டுக்
கனவில் நத்தைகளாகலாம்...

சுமைதாங்கிகளாய் மட்டுமே
பழக்கப்பட்ட
காதலும் , வலியும்
ஆறாம் விரலென
அதிர்ஷ்டமாகலாம் ...

மறுமலர்ச்சியென
எழுத்தாக்க வீதிகளில்
புதுப் பேனாக்களின் முனையில்
பூமிப் பந்தும்
மெழுகாகலாம்.......

இன்று மட்டும்
புத்தாண்டு கொண்டு
திறக்கப்படும் குதூகலமானது
ஏனோ எந்நாளும்
கண்ணாடியில் முகமூடிகளின்
புன்னகையில் ....

எதற்குத் தான்
முகம் சுளித்துவிடும்
தினசரிப் பூக்கள்?!

ஒரு வருடத்தை விற்றுக்
கவிதை வாங்குவதில்
நிறைகின்றது
யாவருக்குமான வாழ்த்துக்கள் ,
எனில் வாழ்வதில்
ஏது கல்...?!

எழுதியவர் : புலமி (1-Jan-15, 9:07 am)
பார்வை : 696

மேலே