கல்லினால் செதுக்கிய இதயங்கள்

என்
எடையை விட இந்த ....
கல்லின் எடை அதிகம் ....
தெரியும் எனக்கு அதுவும் ...
என்ன செய்வது கல்லினால் ...
செதுக்கிய இதயங்கள் ....
இருக்கும் வரை என் நிலை ...
இதுதான் .....!!!

பெற்றெடுத்த ....
பெற்றோருக்கும் ....
நான் சுமையாம் - என்னை
தோளில் சுமக்க அவர்களால் ...
முடியாததால் என் தோள்....
கல்லை சுமக்கிறது .....!!!

ஏய்
முதலாளி வர்க்கமே ....
தொழிலாயின் வியர்வையை ...
தானே இதுவரை சுவைத்தீர்கள் ...
தொழிலாளியின் குழந்தையின் ...
வியர்வையையும் சுவைக்க ....
ஆசையோ ...?

தொழிலாலர்களுக்காய்....
போராடினார் கால்மாக்ஸ் ,லெனின் ...
அன்றே தெரிந்திருந்தால் ...
தொழிலாளர் குழந்தைகலுக்கும்..
போராடி இருப்பார்கள் நிச்சயம் ...!!!

சட்டங்களால் ...
குழ்ந்தை தொழில் தடுக்கப்பட்டாலும் ....
மனசாட்சி அற்ற மனிதருக்கு சட்டம் ...
ஒரு வெற்று கடதாசிதான் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (1-Jan-15, 9:47 pm)
பார்வை : 165

மேலே