புத்தாண்டு
சுவாசங்கள் சுதந்திரமாக அடிக்கடி
கார் மேகம் தரிசனமாக
பார் எல்லாம் பசுமையாக
சாதி பேதங்கள் இல்லாது போக
மனிதம் என்பது புனிதமாக
மனதோடு சபதமெடு
மனமார அன்பை கொடு
அமைதியின் பூமிக்கு
அடித்தளமிடு
அன்பினில் மட்டும்
அடிமையாய் இரு
மலரட்டும் புது ஆண்டு
ஒளிரட்டும் புது பொலிவோடு