உள்ளம் கவர்ந்த ஓவியம்

...""" உள்ளம் கவர்ந்த ஓவியம் ""...

குளக்கரை தென்றலும்
உன் கார்கூந்தலிலே
அன்பின் கதைகள் பேசி
அழகாய் அரவணைக்கும் !!!

இயற்கை பாய்விரித்த
பசுமை புல்வெளியும்
பாவையுன் பாதம்பட
மோச்சமே பெற்றதடி !!!

குயவனில் கைபட்டு
உருவான மண்குடமும்
மங்கையின் இடையேறி
மறுபிறப்பு பிறந்ததடி !!!

உ(ன்)ல்லாச நடைபார்த்து
அன்னப் பறவைகளும்
அதிசயத்து நீரினிலே
நீராடியே நின்றுவிட !!!

பெண் தோரணை பார்த்த
வண்ண ஆண் மயிலும்
தோகைதனை விரிக்காது
மெளனமே காத்ததடி !!!

தாமரை மொட்டுக்களும்
பட்டனத் தான் மலர்ந்து
கன்னியவள் கன்னத்தை
தொட்டுவிட துடிக்குதடி !!!

மெல்லிய இடையாட்டி
புன்னகை பூச்சிந்தி நீ
எவன் வரைந்த ஓவியமோ
எழுதப்படாத காவியமே !!!

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (2-Jan-15, 12:51 pm)
பார்வை : 582

மேலே