காதலித்துப்பார் - உதயா

***************காதலித்துப் பார்************

உன் கால்கள் மண்ணில் பறக்கும்
உன் மனமோ அவளோ நினைத்தே துடிக்கும்
பூக்களைப் பிச்சையெடுத்தே பிச்சைக்காரனாவாய்
பூந்தோட்டங்கள் வள்ளல்கலாகும்

இரவுகளோ காதல் கனவுகலாகும்
காதல் நினைவுகளோ உந்தன் மூச்சுகலாகும்
ஆயிரம் நபர்க்கொண்டு அணிவகுத்தாலும்
ஆயிரம் முகங்களும் அவளாகவே தோன்றும்

தனிமையைத் தேடியே படையெடுப்பாய்
நித்தமும் அவளை நினைத்தே அகம்மகிழ்வாய்
கடலோரக் காற்றும் கவிஞ்சனாகும்
காதோடு கண்ணும் கவியை தேடும்

அவள் இதழ்கள் செடிகளாகப் பிறக்கும்
முத்தங்கள் பூக்களாக உன் மேனியெங்கும் பூக்கும்
விழிகள் ஜாமத்தில் பூக்களாய் பூக்கும்
நினைவுகள் நறுமணத் தென்றலாய் வீசும்

பகலும் இரவும் நொடியாகத் தோன்றும்
மாதங்களும் வருடங்களும் நிமிடங்களாக மாறும்
சாலையில் நடக்கையில் மாயாஜாலங்கள் பிறக்கும்
நெஞ்சோடு நெஞ்சாக அவள் இணைவதுப்போன்றே மனம் நினைக்கும்

அந்தரத்தில் கோட்டைக் கட்டுவாய்
வானவில்லை ஊசலாக்குவாய்
மின்னலைக் கயிராக்குவாய்
இடியோசையைத் தாலாட்டாக்குவாய்

அவளை நினைத்து நினைத்தே
காவியங்களை படைத்து கவிஞ்சனாவாய் ............
ஓவியங்களை வரைந்து கலைஞ்சனாவாய்...................
உலகமே போற்றும் காதல் தலைவனாவாய் ..........

எழுதியவர் : udayakumar (2-Jan-15, 12:48 pm)
பார்வை : 130

மேலே