உன் ரத்தத்தை காணிக்கையாக்கு
உன் தோட்டத்தில்
நான்
பூக்களாகிறேன்,
ஏன் பறிக்காமல்
செல்கிறாய்
என்னை
அடையாளம்
கண்டு கொண்டாயா?
செடிகளில்
முள்ளாக
முளைக்கிறேன் ,
உன் கைகளை
காயபடுத்த
உன் ரத்தத்தை
காணிக்கையாக்கு
எனக்கல்ல
என் காதலுக்கு .