யாரிவன்

யாரிவன் !
~~~~~சேனைகள் இன்றி பார்வைகள் கொண்டு
ஒற்றை நொடியில் உயிரைப் பித்து
~~~~~பெண்மை எனும் உரம் அடக்கிச் சென்றான்
பார்வைகள் மூலம் ~~~~~
~~~~~தலைவனுக்கு ஏற்ப தலை சாய்ந்து
காதலை ஈடேற்றம் ஆக்கிவிட்டதால் -அவன்
~~~~~பார்வையும் தற்பெருமை கொள்கிறது
என் பார்வை அவனை நாடிச் சென்றாதால்~~~~~
~~~~~அவன் பார்வைகளை மடமை என நினைத்து
களிப்படைந்து பாவங்களை சேர்த்து விட்டேன்
~~~~~பறி போன என் இதயம்
வரம்பு மீறி காதல் கொண்டதால் ~~~~~
~~~~~தடைப்பட்டு விட்டது -என்
துடிக்கும் இதயம் -அவன்
பார்வையில் இரண்டு பட்டதால்-என்
~~~~~வார்த்தைகளும் அவன் மேல்
பற்று வைத்தது காதல் பந்தம் வாழ~~~~~
~~~~~கண்கள் இரண்டும் -அவன் உலாவரும்
வீதியைக் கண்டு தைரியம் இழந்து
~~~~~மனமும் ஊசல் ஆடுகிறது
உசிரு போகும் அளவு ~~~~~
~~~~~எஞ்சாத அவன் நினைவுகளை எண்ணி
எண்ணம் எல்லாம் -அவனுக்கு
இசைந்து நடக்கின்றது -ஆராவாரம்
~~~~~எழுப்பாமல் -ஒத்துழைப்பும் கொடுக்கின்றது
இரு மனங்கள் இணைய~~~~~
~~~~~திருடு போன மனதை
பொருட்படுத்தாமல் விட்டு விட்டதால் -இன்று
தனிமைகளுக்கு மறுமொழியாக
~~~~~மெளனங்களை ஆறுதல் பரிசாக அளித்துவிட்டேன்
அவன் விழிகளை விலகி வாழுவதால் ~~~~~
~~~~~உலோபியாக தன் காதலை
அடக்கி மறைத்து வாழுகிறான் -இதானால்
~~~~~துவித மனங்கள் துல்லியமாக
ஒப்படைத்துவிட்டது காதலுக்காய் இரு விழிகளை~~~~~
~~~~~கவிதைகளும் சரித்திரம் படைக்கின்றது
காகிதம் முழுவதும் -அவன்
பெயரை தினமும் எழுதுவதால் -கங்குலும்
~~~~~கண்டனம் தெரிவிக்கின்றது -அவனைப்
பிரிந்த என் நொடிகளுக்கு~~~~~
~~~~~மனதினில் தெளிவு இல்லாமல்
நிஜமான காதல் நிலையாகிறது
நிரந்தரமாய் உள்ளங்களில்
ஈடு இணையில்லாத அவன் நேசத்தினால்
~~~~~தரைமட்டம் ஆகின்றது
தலை குனிந்த என் நாணமும்~~~~~
~~~~~என் நிழலும் அவனோடு
நிலைபெற்று விட்டது
தூற்றுவோர் மத்தியில்- எனை
~~~~~அவன் ஏற்றதால்உறுதியும் ஆனது -நம்
ஒரு தலைக் காதல்~~~~~