காலையில் ஒரு தமிழ் வாழ்த்து

கதிரொளி உனக்குக் கைக் கொடுக்கும் - அதி
காலையில் எழுந்து பழகிடு.....!

கால் - நடை உனக்கு திறன் கொடுக்கும் - அந்தக்
கலையினை நீயும் படித்திடு...!

காலைப் பொழுதில் நடைப் பயிற்சி - அது
கவிதை எழுத புது முயற்சி.....!

கண்களில் இருளும் தொலையட்டும் - இனி
காட்சிகள் கலைநயம் ஆகட்டும்...!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (5-Jan-15, 12:43 am)
பார்வை : 113

மேலே