கவிதைக் காற்றே 20
![](https://eluthu.com/images/loading.gif)
தூரிகை துரிதம் பெற்றது
தூய உன் மோகப் பரிசத்தால்.....
கவிதை கட்டின்றி கரைபுரண்டது
உயிர்காற்றே உன் ஓரங்க உரசலால்.....
நினைவுகள் நின்வருடலால் நிலைமறந்து
கனவுகளில் கற்பனையாய் வரைதாண்டுது
எதுகையும் மோனையும் கைக்கட்டி நெகிழ்ந்து
ஏந்தலன் உனைப்பாடிட மண்டியிட்டது
கள்ளுண்ட களியுவகையில் சுழலுது உள்ளம்
காற்றே உன்னால் மனம் கொள்ளுது கள்ளம்
கம்புகம் போல் என்னில் கிரக்கம் கொண்டு
கருவூலமாய் கவிதைக்குள் கட்டுண்டிடு!
கவிதாயினி அமுதா பொற்கொடி