மோகனக் காற்றே19 B2
![](https://eluthu.com/images/loading.gif)
இதமாய் என்னை வருடியதால்
இதய நந்தவனப் பூக்கள் எலாம்
இதழ் விரித்து மணம் வீசுகிறது
எவரும் அறியா அதன் உன்னத ஓசை
உணர்வுகளாய் என்னுள் துளிர்க்கிறது
அதரங்கள் அந்தரங்கமாய்
மௌனப் புன்னகை மொழிபேசி
மோகத்தின் உச்சத்தில் திளைக்கிறது
எவரும் அதை அறிந்திடாது
மூடி எனக்குள் மறைக்கின்றேன்
முனங்கலாய் எனக்குள் நகைக்கின்றேன்....
கவிதாயினி அமுதா பொற்கொடி