கடல்

கரை தெரியாக் கவிதை - கடல் .
மீனவர்களின் இருப்பிடம் - கடல் .
மீன்களின் சொர்க்கம் -கடல்
மெல்ல மெல்ல காலை வருடும்
அன்பின் உள்ளம் -கடல் .
அலைக்குள் சிக்குண்டு அலைபாயும்
நெஞ்சத்தை அடுத்த அலை
வந்து கலைத்து விட்டுப் போகும்
கனவு சாம்ரா ஜியம் - கடல் .
மோதியும் மோதாமலும்
சின்னதாய் ஊடல் செய்யும்
காதலர்களின் களஞ்சியம் -கடல் .
இரவுபகல் பிரித்தறியாது ஓய்வின்றி
ஆர்பரிக்கும் அற்புதம் -கடல்
சின்ன சின்ன மணல் வீடு கட்டி
சிங்காரமாய் சிறார்கள்
விளையாடும் மைதானம் - கடல்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (5-Jan-15, 3:04 pm)
Tanglish : kadal
பார்வை : 233

மேலே