சாதி ஒழி மதம் அழி சாதி - பொங்கல் கவிதை போட்டி 2015
சாதியை ஒழிக்க
சாதனை பிறக்க
மதங்களை அழிக்க
மானிடர் வாழ
முதலில்
பள்ளிகளை திறக்க .
சாதிகளை ஒழிக்க
என கற்க
சாதியை சொன்ன பின்
சேர்க்கும்
ஆசிரியரை நீக்க
ஆதியில் மாற்றினால்
அந்தமுதல் மாற்றப்படும்
சாதிக்கு சலுகைகள்
மதத்திற்கு மரியாதை
மாற்ற வேண்டும்
சாதியே வேண்டாம்
என போராடும்
தற்கால பிள்ளை
சாதி வாரி கணக்கெடுக்கும்
தந்தை
சாதியென்னும் கலையை
பரிக்குமிடம் பள்ளி
ஆனால் தற்போது
சாதி என்னும் விதையை
போடுமிடமே பள்ளிதான்
சாதி என்னும் காம்பை
கிள்ளி எறியுங்கள்
காணமல் போகிவிடும்
அதன் காரம்
அனைவரின் உச்சந்தலைக்கு ஏறும்
காம்பை கிள்ளும் காரம்
உறங்கிகொண்டிருக்கிறது
அதனை தட்டி எழுப்பும்
கரங்களை வளர்ப்போம்
கரங்களாய் மாருஓம்
சாதி மதத்தினை
அழிப்போம்
ஒழிப்போம்
விழிப்போம்
எழுதியவர் : இன்பகுமார்.மு
இடம் ; வேலூர் மாவட்டம் , சென்னங்குப்பம் .
நாடு ; இந்தியா
அலைபேசி என் : 9597128761