உன்னில் நான்

ஆசையாசையாய்
உனக்கு,
ஆபரணங்கள் அணிவித்து
ஆனந்தப்படும் பொழுதெல்லாம்,
"உனக்கு...?" என
வினாத் தொடுக்கும்
உன் உதடுகளுக்கு
எப்படிப் புரிய வைப்பேன்?
"நான் என்னைத் தான்
அழகு பார்க்கிறே"னென.

எழுதியவர் : அ.நௌசாத் அலி (7-Jan-15, 10:53 pm)
Tanglish : unnil naan
பார்வை : 81

மேலே