இப்படி நாம் காதலிப்போம் “பொங்கல் கவிதை போட்டி 2015”
அந்திமாலை பொழுதினிலே நந்திபோல காத்துநின்றேன் .......
அசைந்தாடும் பஞ்சுச்சிலை நடந்துவரக் கண்டுகொண்டேன்!
வீட்டுக்கு தெரியாமல் விருந்துதர வந்தாள் - அவள்
பூமிக்கே விண்மீனைப் புன்னகையால் தந்தாள்!
வெகுநேரம் காக்கவைத்து காட்சி தரும் பெண்ணே!
தேகமெல்லாம் தொட்டதுவுன் தென்றல் வந்து என்னை!
பக்கம்வர மறுக்குதுவுன் பருத்திப்பஞ்சு பாதம் - நான்
முத்தம் தரமாட்டேன் வா வனத்திற்கு போவோம்....
காதல் வார்த்தை பேசுமுந்தன் உதட்டின்வோரம் அழகு.....
கவிகேட்டு நாணுமுந்தன் கால்விரலும் அழகு......
நீ தொட்ட செடிகொடிகள் மட்டும் காட்டில் அழகு- நீ
என்னருகில் நிற்கும்போது நானும் கொஞ்சம் அழகு!
கூட்டுக்குள்ளே கலவிகொள்ளும் குருவிகளை கேளுமடி.....
காட்டுக்குள்ளே காதல்கொள்ள காமம் வந்து பாயுமடி!
அக்கம் பக்கம் பார்ப்பதற்க்குள் அந்த(ப்) புறம் மறைவோம் - இனி
ஆளில்லா காட்டுக்குள்நாம் அங்கங்களை பகிர்வோம்!
கோடிட்ட இடம் நிரப்ப விடை ஒன்று சொல்லு.......
சம்மதித்தால் எழுதுகிறேன் கொஞ்சம் நீ நில்லு.......
காமத்தீ உனக்குள்ளும் பரவுதடி கொஞ்சம் - நீ
அருகில்வா அணைத்துக்கொள் என்னுடைய நெஞ்சம்!
முத்தமிட வந்தவளின் மூச்சுபட்டு கண்விழித்தேன்....
கண்டதுவோர் கனவுயென்று நாணப்பட்டு புன்னகைத்தேன்!
"இப்படி நாம் காதலிப்போம்" உண்மையிலும் பெண்ணே - நீ
இக்கவியை படித்துவிட்டு வந்துவிழு முன்னே!.......
படைப்புக்கு தானே முழு உரிமையாளர் என்று உறுதியளிக்கிறேன்.
பெயர்: த.தினகரன்
வயது: 25
வதிவிடம்: 9 D, MIG -9, பழைய ASTC ஹட்கோ, ஓசூர்-635109, தமிழ்நாடு.
நாடு: இந்தியா
அழைப்பிலக்கம்: +919677704415, +918608007635