தென்றல் விடு தூது

மார்கழியும் கார் பொழிவும்
காலமாற்றத்தில் வருகை தந்தனவா .....? இல்லை நம்
காதல்மாற்றத்தை அறிந்தே வந்தனவா

இடைவிடாது வதைக்கும் அதற்கு நம்
இடைவெளி தெரியாது போயினவோ....?
இல்லை இன்னவள் இல்லா தருணத்தில்
இவையிரண்டும் தன்துணை தந்தனவோ....??

அட கார் முகிலே
என்னவளின் கூந்தல் கண்டதுண்டா.....?
கண்டிருந்தால் தலைதூக்கி இருப்பாயா
முகிலின த்துள் இத்தகைய கருமையோ என வெட்கி மறைந்திருப்பாயே

ஏ பனிப்பொழிவே
என்னவள் கண்களை கண்டதுண்டா.....?
கண்டிருந்தால் வந்திருப்பாயா
பனித்துளிகளில் இத்தனை குளிரா என
போர்வைக்குள் உறைந்திருப்பாயே

இதையறிந்து தான்
என்னவள் அற்ற நேரத்தில்
உம்பலம் காட்ட வந்தீர்களா......?

தென்றலே மூன்றாம் நபராய்
வேடிக்கை பார்க்காதே
தென்றலே புல்லாங்குழல் வழி
இசையாகுபவளே
தரணியில் பவணி செல்பவளே
எனக்காக தூது செல்வாயா.......?
என்னவளின் ஸபரிசத்தை கொஞ்சம்
களவாடி வா
அதன் இளஞ்சூட்டில் சற்றே நிம்மதியடைவேன்

அவசரப்படாதே வருகையில்
உன்னவன் உன் நினைவில்
விழி மூடாது உறங்க
வழி தேடுகின்றான்
பனிமகனும் மழைமகளும்
அவனை பரிகாசிக்கின்றனர்
கோபம் விடுத்து விரைந்து வா

உன் கூந்தல் மணம் இல்லாது
உன் பார்வை மொழி இல்லாது
தனிமையில் தனை இழந்து
தவிக்கிறான்
கோபம் விடுத்து விரைந்து வா
என சொல்லி வருவாயா......?

எழுதியவர் : கவியரசன் (7-Jan-15, 11:43 pm)
பார்வை : 2278

மேலே