நீண்ட...தேடல்...

எந்தன்
சித்திரத்தோட்டத்தில்
வண்ணத்துபூச்சி...

ஏதோ தேடுவதை
எதையோ விரும்புவதை
கண்டேன்...

நீண்ட தேடலுக்குப்பின்
கண்டது அந்த மலரை
அதன் பிரிய நேசத்தை...

எல்லாவற்றிலும் அரிதாய்
புனிதமாய் தெரிந்தது
மலர்...அந்த வண்ணக்கலவைக்கு...

தினம் அதை தேடி
வருகிறது
அதனருகில் இருக்க
விரும்புகிறது...
அதன்
வாசமே சுவாசமானது...

வெட்டி எறிந்தார்
மண்ணின் மேல்
மலரை...தோட்டக்காரர்...

சிறகடித்து பறந்து தேடுகிறது
மலரை...
வண்ணச்சிறகு விரித்து வாழ்ந்த வண்ணத்துப்பூச்சி...
என்றாவது காணுவோம்
என்ற ஏக்கத்தோடு...

கண்டது
வெயிலில் வாடிய
மலரை...
வலியில் துவண்டது
வண்ணத்துப்பூச்சி...

மலரை...நினைத்து...
மரணத்தை எதிர்நோக்கி...
வதங்கி விட்ட மலர்போல்
என் வாழ் நாளும்
முடியட்டுமென்று...

எழுதியவர் : Ivan (16-Apr-11, 10:42 am)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 635

மேலே