கிழிந்த ஓவியம்

வெடிகுண்டுகள் தூரத்தில்
எழுப்பும் சப்தம்..
காதுகளில் ஒலிக்கவே இல்லை என்பது போல்..
அந்த இளம் பெண் ..
தூரிகையால்..ஒரு ஓவியம்
வரைந்து கொண்டிருந்தாள்..
போருக்கும் இவளுக்கும்
என்ன சம்மந்தம் ..
..
போராளி என்ற பெயரில்
ஒரு மிருகம்..
ஏன்..
இவர்களை சூறையாடி விட்டு
தங்கள் நாட்டுக் கொடியை
தீயிட்டு கொளுத்தி
கோஷம் போட்டு செல்ல வேண்டும்..?
..
போரில்லாத போதே
உள்ளூர் ஓநாய்கள்
ஏன்..
இவர்களின் சதைக்கு
விலை பேச வேண்டும்..?
..
எப்பொழுதும்..
என்றைக்கும்..
ஏன்..
இந்த நிலை இவர்களுக்கு மட்டும்
வர வேண்டும்..?
..
இதோ ..
ஓவியத்தை முடித்து விட்டாள்..
காரிகை..
உடைந்தது போனது தூரிகை..
சிவப்புக் கோடுகளுக்கு..
நடுவில்..
ஒரு..
புள்ளி மான்..
வாயில் எச்சில் ஒழுக
திரும்பி போய்கொண்டிருக்கும் ..
ஒரு ..
மனிதக் குரங்கு..!
..
அடுத்த கூட்டம்..
ஆரவாரத்தோடு அவள்
குடிசைக்குள் நுழைய..
அதிர்ச்சியில்
உறைந்து
போய் நின்றது..
ஓவியத்தின் அருகில் கிழிந்த ஓவியமாய் அவள்..
ஒரு கையில்
கத்தியை
ஒரு
ஆண் மிருகத்தின்
கழுத்தில் செருகி விட்டு!