என்னோட காதல் மொழி பேச வந்தாயோ ஏனிந்த தயக்கமடி கண்ணே
![](https://eluthu.com/images/loading.gif)
வெண்ணிலா வீதியில
உலா வருது - தங்கம் .
மேகங்கள் ஒன்றாகத்
தங்குமடித் தமிழ் - சங்கம்
வானத்துல விண்மீன்கள்
ஜொலிக்குது பார் ; ஓர் - அங்கம் .
வானவில்லும் அழகாக
தெரியுதடி வான் - எங்கும் ( என்னோட ...)
உள்ளங்கள் ஒன்றாகச்
சேருதடி என்- கண்ணே !
உலகத்தின் அதிசியமோ
நீதானடி என்- பெண்ணே !
மென்மையாய் வருடி மேகமோ
பொழியுது - காதல் மழை .
கள்ளங்கபட மில்லாம அத
ரசிக்குதடி - வான் மழை . ( என்னோட ..)
உன் சிரிப்பொலிக்கு ஈடில்லை
இந்த ஜில்லாவுல - செல்லம் .
சிதறுதடி மத்தாப்பு
சிலையாகி போகுதடி - வெல்லம்.
இதழோடப் புன்னகை பேசுதடி
என்னோட - காதல் மொழி .
உன் கண்ணழகின் ஈர்ப்புக்கு
ஏதுமில்லை - எந்தன் மொழி . (என்னோட ..)