நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி 2015

இந்தியன் என்ற எண்ணம்
இனிதே இருக்கட்டும்
தமிழன் என்ற எண்ணம் என்றும்
தலை நிமிர்ந்து நிலைக்கட்டும்
வெள்ளையனை வெளியேற்றி
தனித்துவம் படைத்த நமக்கு
ஆங்கிலம் என்றால் அம்சமான அறிவு
தமிழ் என்றால் தலை குனிவோ!..
என் தாயின்றி நான் இல்லை
நம் தமிழ் இன்றி நாம் இல்லை
தாய் அன்பினை உணர்த்த
தனியொருவர் தேவையில்லை
ஏடுகளில் வலம் வரும் தமிழை
ஏட்டுச் சுரைக்காயாக மாற்றி விடாதே..
விளைய வேண்டியது அனைத்தும்
விதிகளாகவே இருக்கின்றது
அழிய வேண்டியது அனைத்தும்
அறுவடைக்கு தயாராகின்றது
விரைந்தெழுந்து வா தமிழா
தமிழுணர்வை விதைக்க வா
கவி கொஞ்சும் தமிழை
திசை எட்டும் தித்திக்கும் தென்றலாக்குவோம்...