சாதி ஒழி மதம் அழி சாதி - பொங்கல் கவிதை போட்டி - 2015

சாதிகள் இல்லையடி பாப்பா இதை
சாதிக்க வெனுமடி பாப்பா

சாதிகளை ஒழிக்க வேண்டும் -அதில்
சாதிக்க துடிக்க வேண்டும்

வீண் பேச்சு வேணாம்
விவாதங்கள் வேணாம்

நன்மைகளை பேசு -உன்
சவாலை வீசு
நன்மை பிறக்கும்
நல்யுகம் சிறக்கும்

உண்மைகளை பேசு அதில்
சாதி அறுக்கும் அரிவாளை வீசு
உண்மை பிறக்கும்
உலகம் சிறக்கும்

சாதிக்க துடித்தால்
சாதிகளை அடித்து ஒழி
சமரசம் பிறக்க நினைத்தால்
மதத்தை மிதித்து ஒழி

உண்மைகள் பிறந்தே ஆகும்
நன்மைகள் சிறந்தே ஆகும்
சாதிகள் ஒழிந்தே போகும்
மதங்கள் இழிந்தே போகும்
சாதி சாம்பலாய் போகும்
மதம் மண்ணாய் போகும்
மாதர் மகிழ்ந்தே வாழும்
உலகம் சிறந்தே வாழும்

சாதி ஒழி
மதம் அழி
மாந்தர் விழி

இந்தக்கவிதை என்னால் எழுதப்பட்டது
பெயர் : இன்பகுமார்
இடம் : வேலூர் மாவட்டம் , சென்னங்குப்பம் .
இந்தியா - தமிழ்நாடு
தொடர்பு 9597128761

எழுதியவர் : இன்பகுமார் (11-Jan-15, 1:57 pm)
பார்வை : 135

மேலே