பெண்ணே

சுவைப்பதற்கும் ,
உமிழ்வதற்கும் ,
நீ ஒன்றும் அனாதை இல்லையடி ..................

வானில் பறப்பதற்கும்,
மண்ணில் நிலைப்பதற்கும் ,
நீ எல்லை இல்லா
உயரத்தை தொடும்
கடவுளின் அவதாரம் நீயடி ................

மறப்பதற்கும் ,
நல்லதை நினைப்பதற்கும்,
எண்ணில் அடங்கா காரண
வித்தைகளை விதைத்தவள் நீயடி ..................

வீழ்வதற்கும் ,
வீறுகொண்டு எழுவதற்கும் ,
உறுதி கொண்டு
நெஞ்சம் படைத்தவள் நீயடி .................

அழுகையும் ,
சிரிப்பையும் ,
உன் உள்ளத்தில்
மிதக்கும் அன்பினால்
எல்லோரையும்
சிறை பிடித்தவள் நீயடி ...................

விட்டு விலகுவதற்கும் ,
கட்டி அணைப்பதற்கும் ,
பாச கயிர் கொண்டு
உன்னுள் துடிதுடித்து
கொண்டே இருப்பவள் நீயடி .................

அன்பை சுவைப்பதற்க்கும்,
துன்பத்தை சுமப்பதற்கும் ,
நெஞ்சுக்குள் நிற்கும்
கவிதையே நீயடி ....................

எழுதியவர் : விவேகா ராஜீ (11-Jan-15, 10:46 pm)
Tanglish : penne
பார்வை : 964

மேலே