சாதி ஒழி மதம் அழி சாதி “பொங்கல் கவிதை போட்டி 2015”
இஸ்லாமிய சகோதரனின் பண்டிகை கொண்டாட்டத்தில்
....இல்லம் தேடிவரும் இனியஉணவை ருசித்துவிட்டு
இந்துவும் ...கிறிஸ்தவனும் கை கழுவுகிறார்கள்
....மெல்ல மதமும் அங்கு கழுவப்படுகிறது ...
முகம்தெரியா முஸ்லிம் சகோதர உயிர்காக்க
....முழுவீச்சில் முயலும் கிறிஸ்தவ மருத்துவன்
மும்முரமாய் இந்துவின் இரத்தம் பாய்ச்சுகிறான்
....மெல்ல மனிதம் அங்கு உயிர்க்கிறது ...
கண்ணுக்குத் தெரிந்தும் ...கண்ணுக்குத் தெரியாமலும்
....காலங்கள் கற்றுத்தரும் மனிதத்தை
கட்டங்களில் சுட்டிக்காட்டும் சாதிகளும்
....சட்டங்களில் உயிர்த்தெழும் மதங்களும் உணருமா ?
காதல்கொண்ட உயிர்சிதைக்க கடும்தீயாய் எழுந்தசாதி
....கனிவுகொண்ட மனம்உடைக்க காட்டாறாய் எழுந்தமதம்
கற்றுத்தந்தகாயங்கள் மாறுமோ ? வீழ்ந்தசொந்தங்கள் எழுமோ ?
....களையிழந்தமனிதமினி உயிர்க்கட்டும் காசுபார்க்கும் கயமைஅழியட்டும்
நேசம்வைத்து மனமருகே நெருங்கிவா எம்மனிதா
....பாசம்வைத்தால் பாரெங்கும் பாயாதோ பந்தங்கள்
காசுபணம் தேவையில்லை அன்புகண்ட உள்ளத்தில்
....மாசுபெற்ற மதியிங்கே மடமைநீங்கி மாறட்டும்
மனமறுக்கும் மதமும்வேண்டாம் உயிர்குடிக்கும் சாதிவேண்டாம்
....மனிதம்வளர்க்கும் மறுஅன்புசெய்வோம் மாறிவிடு எம்மனமே..
மாறுதலின் சூட்சுமத்தை மறுத்தலின்றி உணர்ந்துவிடு
....மதம் அழி...மடமை ஒழி சாதி ஒழி ..சாதிக்க....அதுவேவழி
----------------------------------------------------------------------------------------------------------
இந்த கவிதை என்னால் எழுதப்பட்டது என உறுதியளிக்கிறேன்.
முகவரி
குமரேசன் கிருஷ்ணன்
97,சங்குபுரம் 6ம் தெரு ,
சங்கரன்கோவில் -627 756
திருநெல்வேலி மாவட்டம்
தமிழ் நாடு .