சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதை போட்டி 2015

மனிதனோடு கூடாதே காக்கையே
கெட்ட சேதி கூறிடுவான்-உனையும்
சாதி சொல்லி பிரித்திடுவான்.

கூடி வாழும் உனக்குள்ளும்
பல குளறுபடி செய்திடுவான்

நிறம் சொல்லிப் பிரிப்பான்-அலகின்
கனம் சொல்லிப் பிரிப்பான்
எப்படி என்று கேட்டால் அதற்கும்
ஒரு கதை செய்து வைத்திருப்பான்

சகதியில் புரண்டாலும்-அதை
சாதீயச் சடங்கென்பான்
தீண்டாமை எனும் பேரில்-தனித்
தீவுதனைப் படைத்திடுவான்

அறம் என்பான் சான்றோரின்
வரம் என்பான் பணத்தாலும்
பண்பாலும் தாழ்ந்தோரை-தனக்குக்
கீழ் என்று விதி செய்வான்

தனைத் தாங்குவோரை கிளை செய்வான்
தனனைச் சாடுவோரை பித்தென்பான்
இப்படித்தானே
முண்டாசுத் தெய்வம் ஒன்றை
பட்டினி போட்டுக் கொன்றான்..

அ.ஸ்ரீதரன்
த/பெ அசோகன்
5/28A, சுபதேவி இல்லம்
சுள்ளங்குடி
திருக்கோஷ்டியூர்
சிவகங்கை மாவட்டம்
630210
தொலைபேசி 9047671277

எழுதியவர் : ஸ்ரீதர் (12-Jan-15, 10:01 am)
சேர்த்தது : Sridharan
பார்வை : 102

மேலே