நகைச்சுவை விருந்து ,, 1

படித்ததைப் பகிர்ந்துள்ளேன் ..

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..?
சும்மா இருங்க சார். பரிக்ஷைக்குக் கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்.

===

உன் பேரு என்ன..?
" சௌமியா "
உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க?
தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க, பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

===

இண்டெர்வியூவில் ..
உங்களுக்கு பிடிச்ச ஊர் எது ?
சுவிஸ்சர்லாந்து.
எங்கே ஸ்பெல்லிங் சொல்லுங்க.
ஐயையோ.. அப்படின்னா " கோவா "

===

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி விபத்து ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா ?
அவர் : தெரியுது.
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை.

===
( பரிக்ஷை ஆரம்பிக்கும் முன் )
மாணவன் : டீச்சர் ஒர் டவுட்டு.
டீச்சர் : பரிக்ஷை ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு,
இப்ப போயி என்னடா டவுட்டு ?
மாணவன் : இன்னிக்கு என்ன பரிக்ஷை ?

===

மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..
அப்பா : வெரி குட். பொண்ணுங்க இப்படிதான் இருக்கணும். எந்த துறையைல சாதிக்க போற ?
மகள் : ஐயோ அப்பா, நான் எதிர் வீட்டு பையன் "சாதிக்" -ஐ விரும்பறேன்.

எழுதியவர் : (12-Jan-15, 7:21 pm)
பார்வை : 163

சிறந்த நகைச்சுவைகள்

மேலே