நாளைய தமிழும் தமிழரும் -பொங்கல் கவிதை போட்டி

வால் இழந்த வானரமான மனிதன்
வாய் திறந்து தம்முள் பேசியது தமிழ்
தமிழ்மட்டும் பேசிய கண்டம்
தகர்ந்து போனதாம் அகவிசை பட்டு

தமிழ்நாட்டில் தமிழ்ச்சங்கம்
தரணி எங்கும் விளைந்தது
தமிழ் வளர்ச்சியின் அங்கமே

தமிழ் பிறந்த இடமதில்
வறுமைப்பட்டு போயிலும்
புகுந்த இடமெங்கும்
பெருமைப்பட்டு வாழும் என்றும்

தமிழ் வட்டு எழுத்துக்கள் தாண்டி
இறுவெட்டுக்களிலும்
ஓலைச்சுவடி நீங்கி
மென்பொருள் கோப்புகளிலும்
மாறிய தமிழ்

காலத்தின் அசைவோடும்
பூகோளத்தின் அசைவோடும்
இளமை பொலிவுடன்
என்றும் வாழும் அழிவின்றி

எழுதியவர் : இணுவை லெனின் (14-Jan-15, 11:18 pm)
சேர்த்தது : இணுவை லெனின்
பார்வை : 99

மேலே