உன்னைப்போல நானல்ல

நீருக்கு ஏற்ப வளைந்துபின்
நிமிர்ந்து நிற்கும் நாணலே...

*உன்னைப்போல நானல்ல !*

வளைவதாலேயே நானிங்கு
வீழ்ந்து போகிறேன் நாணலே...

*உன்னைப்போல நானல்ல !*

விறைத்து நிற்பாய் நானென்றே
வில்லில் பூட்டிய நாணே...

*உன்னைப்போல நானல்ல !*

நிமிர்ந்து நின்றால் தானே - இன்று
உதிர்ந்து மறைவேன் நானே...

*உன்னைப்போல நானல்ல !*

காலமது கூடுமே - அதுவரை
காத்திருப்பேன் நானுமே !

*ஒருநாள் நானாவேன்...*

திமிரும் நாணாவேன்...!
நிமிரும் நாணலாவேன்...!!

*திலகம்சூட்டி வருவேன் நானுமே - அன்று*
*முகம்பொத்தி உலகமே நாணுமே

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (14-Jan-15, 11:21 pm)
சேர்த்தது : ஹரிணி
பார்வை : 148

மேலே