இப்படி நாம் காதலிப்போம் பொங்கல் கவிதைப் போட்டி 2015

குன்றாத வளமைசூழ் நாட்டில் பிறந்தோம்
கூற்றத்திலிருந்து இயற்கை வளத்தைப் பேணுவோம்
ஒன்னார் பகையிலிருந்து நாட்டைக் காப்போம்
உயர்வு தாழ்வின்றி ஒன்றாக கைச்சேர்ப்போம்
ஆன்றோர் பலரிருந்தும் வறுமை இருக்கக்கண்டோம்
அயராது ஏழ்மை நீங்க வழிச்செய்வோம்
ஒன்றிணைந்து பொருளாதாரம் பெருக உழைப்போம்
உயிர்நாட்டை இப்படி நாம் காதலிப்போம் !

தொன்மைதாய் மொழியினை உரிமை கொண்டோம்
தொலைக்காமல் காக்க புதுமைதனைப் புரிவோம்
நன்மைதரும் இலக்கண இலக்கியங்களைக் கற்போம்
நன்றாய் அவைதனை உலகரிய செய்வோம்
பன்மையில் மொழிபல பேச கற்றோம்
பண்டைத் தமிழின் பயனைப் பெருக்குவோம்
தின்மைகொல் மொழிப்பற்று பெருக உழைப்போம்
தாய்த்தமிழை இப்படி நாம் காதலிப்போம் !

சிறந்த நாகரிகத்தை உலகில் படைத்தோம்
சாதிமத பிளவுகளை இனத்தில் களைவோம்
மறந்த பற்றுதனை மனத்தில் வளர்ப்போம்
மழுங்கிய இனத்தின் மேம்பாட்டிற்கு உழைப்போம்
பிறந்த பொல்லா மடமைதனைக் கொழுத்துவோம்
பொய் போதனைகளை அடியோடு அழிப்போம்
இருக்கும் ஒழுக்க சீர்கேடுகளை மாற்றுவோம்
இனத்தை இப்படி நாம் காதலிப்போம்

இக்கவிதை என்னால் இப்போட்டிக்காகவே எழுதப்பட்டது என உறுதி அளிக்கின்றேன்.

பெயர் : துராந்திரன் குமரவேலு
வயது : 23
ஸ்கூடாய், ஜொகூர், மலேசியா. /Skudai, Johor, Malaysia.
அழைப்பிலக்கம் : 60143109649

எழுதியவர் : துராந்திரன் குமரவேலு (15-Jan-15, 6:52 am)
பார்வை : 101

மேலே