தாயின் இறுதி கடிதம்
மகளே!
என் இறுதி கடிதம்...
வாழ்க்கை என்னை வாழவிடவில்லை.....
கேள் மகளே!
உன் தாயின் சோகக் கதையை!!!
பிறந்தேன்,
பிறப்பு என்னை ஏமாற்றியது!
பெண்ணாய் பிறப்பதே சாபம்-இதில்
நான் ஊனமாய் பிறந்தேன்!
வளர்ந்தேன்,
வளர்ச்சி என்னை குறுகச் செய்தது!
என் வயதுப் பிள்ளைகள் ஓடி விளையாட
நான் நடக்கவும் சிரமப்பட்டேன்!
என் ஏமாற்றங்களை களையெடுக்க படித்தேன்!!!
கால்களால் நிற்க இயலாதவள்!
படிப்பால் நின்று காட்டினேன்!
நான் உயரத் தொடங்கினேன்
அணையும் விளக்கின் பிரகாசமாய்!
மணந்ததேன்,
பெண்பிள்ளைகள் என்றும்
பெற்றவர்களுக்கு பாரம்!
நானோ! மாற்றுத்திறனாளி!
பொதிமூட்டையாய் கணத்தேன் போல!
மூட்டையை இறக்கவும் இடம் வந்தது
என் திருமணமும் முடிந்தது!!
இழந்தேன்,
திருமணம் எனும் நாடகத்தில்
ஒரு வருட கதாநாயகியாய் வலம்வந்தேன்!!
நாடகம் முடியும் தருணம்
கைம்பெண்ணாக மாறினேன்!
இழந்த இழப்புக்கு ஈடாக....
என் உறுதுணையாய்-நீ
என் வயிறறில் ஜனிக்க!!!
வாழ்க்கையின் மறு அத்தியாயத்தை தொடங்கினேன்!
எனக்கு தெரியவில்லை இது எனது இறுதி அத்தியாயம் என்று!!!!
மறைந்தேன்,
உதிரத்தில் கலந்து
வயிற்றில் ஜனித்து
கையில் உன்னை
ஏந்தக்காத்திருந்தேன்!!
விதி நம்மை இணைக்கவில்லை
மாறாய் பிரித்துவிட்டது!!
மன்னிப்பாயா மகளே!
இந்த புது உலகில்
உன்னை தனியாய் விட்டுப் போய்விட்டேன்!
உனக்காக என் கடைசி வரிகள்,
பெண்ணாய் பிறந்துவிட்டாய்
அதில் தவறில்லை!
நிமிர்ந்து நின்று போராடு
வாழ்க்கை பயந்து வழிவிடும்!
பயங்கள் உன்னை அண்டாமல்
கவலைகள் உன்னை கலக்காமல்
பாதுகாப்பாய் பார்த்துக்கொள்வேன்!!!!!
இப்படிக்கு,
உன் அம்மா!!!