சந்தோசம்
“தம்பி!! ஒரு பீர்!”
“என்ன அண்ணே! இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க?? மூஞ்சி டல்லா இருக்கு?”
“அதை விடுப்பா! பீரை எடுத்திட்டு வா!”
“பரவா இல்லை, சொல்லுங்கண்ணே!!”
“அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா”
“போங்கண்ணே! சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?”
“அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்!”
“அண்ணே... ரெண்டு போத்தல் போதுமாண்ணே?"