படிப்பது சுகமானதா சுமையானதா
சீன ஞானி ஒருவர் இளைஞர்களுக்கான சொன்ன ஒரு கதை.
உங்கள் வெற்றிக்கு இந்தக் கதை மிகவும் உதவும்.
நம் மாணவ,மாணவியர்களைப் பார்த்து படிப்பது சுகமானதா? சுமையானதா? என்ற ஒரு கேள்வி கேட்டால் சுமையாக இருக்கிறது என்பதுதான் பலரின் பதிலாக இருக்கின்றது.
படிப்பது சுமையல்ல சுகம்தான் என்கிறது
இந்தக் கதையின் நிகழ்வு.
ஓர் அழகான ஊர். அந்த ஊரில் உள்ள ஓர் இளைஞன் நல்ல கனமாக வளர்ந்த ஒரு பசுமாட்டை எந்தச் சிரமமுமின்றி
தன் தோல் மேல் போட்டு கொண்டு தூக்கிக் கொண்டு
ஊரைச் சுற்றி வந்தான்.
ஊரே அவனைப் பாராட்டியது. இன்னொரு பக்கம் ஆச்சரியப்பட்டது.
எப்படி உன்னால் இவ்வளவு பெரிய மாட்டைத் தூக்கிச்
சுமக்க முடிகிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது.
ரொம்பவும் சுலபம்தான் என்றான் அவன்.
எப்படி?
‘இந்தப் பசு கன்றுக்குட்டியாக இருந்த நாளிலிருந்து தினம் தினம் தூக்கிச் சுமந்து கொஞ்சுவேன். அதனோடு விளையாடுவேன். அதுவே பழகிவிட்டது.
இப்படி தினம் தூக்கிப் பழகியதால் அதன் கனம் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை என்றான்.
பாடம் படிப்பதும் இப்படித்தான். அன்றாடப் பாடங்களை அன்றாடம் படித்து விட்டால் எவ்வளவு கனம் கூடினாலும் அது சுமையாகத் தெரியாது.
சுகமாகத் தெரியும்.
அத்துடன் ஈடுபாடும் சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருக்க வேண்டும்.
ஈடுபாடு என்பது தனித்து திகழ்வது அல்ல.
எல்லாவற்றின் மீதும் அக்கறை கொள்பவர்களுக்குத் தான் உழைப்பில் ஈடுபாடு பிறக்கும்.
இதுதான் உண்மை..,
ஆம்,நண்பர்களே.,
இது மாணவர்களுக் கான கதை மட்டுமல்ல.
அனைவருக்கு மான வாழ்க்கைப் பாடம்.