அடையாளங்கள்

நமக்கு தேவை..
சில அடையாளங்கள்தான்..
அன்னைக்கு..தந்தைக்கு..
ஆசிரியர்க்கு..
நண்பருக்கு..
வாழ்க்கை துணைக்கு..
காதலுக்கு..
என்று எல்லாவற்றிற்கும்..
அடையாளப் படுத்துதலின் வழியாகவே..
அறிகிறோம்..அவரவரை..!
நமக்கென்று தனியாக ஒரு அடையாளம்
இருக்காதபோதிலும்..
அல்லது ..
பலவித அடையாளங்கள்
கொண்டிருந்தாலும்..
நமக்கு தேவை..
சில அடையாளங்கள்தான்..!
அவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று..
நமக்கு உதவிட..
நமக்கு தேவை..
சில அடையாளங்கள்தான்..!

எழுதியவர் : கருணா (19-Jan-15, 12:37 pm)
Tanglish : adaiyalangal
பார்வை : 213

மேலே