மலை வாழினத்தின் காத்திருப்பு - உதயா

பாலை வனந்தோறும்
முளைத்த கருவேல மரமாக
காடு மலைதோறும்
பிறந்த மலைவாழ்
மக்களாக நாங்கள் ......
வெயில் காலத்தில்
கல்லாய் காய்ந்தும்
மழைக் காலத்தில்
மண்ணாய் நனையும்
பாவப்பட்ட பிறவி
நாங்கள் ........
வயிறோடு பிறந்த
பசியை புசித்து இளைப்பாற
தினமும் மரணத்தின்
நுனியில் போராடி
உணவைத் தேடும்
சபிக்கப்பட்ட
மக்கள் நாங்கள்....
எம்மினத்தின்
வாழ்வு மேம்பர
தாழ்வோடு கொடுத்த
கோரிக்கைகள் யாவற்றையும்
கண்ணில்
காணாமலே காற்றில்
பறக்கவிட்டனர்
அரசாங்க அதிகாரிகள்......
சிறகுகள் துளிர்த்த
சின்ன சிறுவர்கள்
பள்ளியில் பயில
பள்ளி வாசல் சென்றால் ...
உடைபோட தெரியாத
உமக்கு
வாழ்வில் நடைபோட
கல்விஎதர்க்குயென
துளிர்த்த சிறகுகளை
துண்டித்து விட்டார்கள்
குருமார்கள் .......
உழைத்து உரிமைகளை
நிலைநாட்டலாமென நினைத்து
வேலை தேடி
பல இடங்களை நாடியபோதேல்லாம்
நாய்களை விட்டு தொரத்தி
நாயைவிட கேவலமாக
நடத்தும் முதலாளிகள் .........
எம்மவர்களை
காட்டிலே படைத்து
காட்டிலே எம்மினத்தின்
வாழ்வை முடிக்கும்
கடவுள் கூட
சாத்தானாக
தெரிகிறான் கண்களுக்கு ........
வாழ்வு உயர
வழி பிறக்காதயென
முன்னேற துடிக்கும்
இளவட்டங்களின் மனம்
இயங்கியே தவிக்கின்றன ....
வாழ்வின்
விடியலுக்காக.........
விடியுமென
தெரியாமலே
காத்திருக்கின்றனர் .....
விடியுமா
எம்மினத்திற்கு வாழ்வு ?????????????