அப்பாவி மாமன்
மந்தாரப்பூ
தோட்டத்திலே
என் மாமன்
நடக்கும்
பாதை
ஓரத்திலே
வந்து நிற்பேன்
நானும் தவறாது
சொக்க
வைப்பேன்
மாமனை
தினமும்.........
வாச மலர்
சோலையிலே
ஆசையுடன்
நான்
பார்க்கையிலே.....
காசி கொடுத்து
மலர் வாங்க
வரும் மாமன்
நெஞ்சையும்
சேர்த்து நான்
கேட்கையிலே.....
என் பார்வை
சுட்டு திக்கு
முக்கு ஆடிப்
போவார்
மாமன்
கொஞ்ச
நேரத்திலே......
கஞ்சா வைத்த
என் கண்ணை
மாமன்
நோக்கையிலே
மஞ்சம்
தேடி ஓடும்
அவர் மோகம்
அக்கணமே.....
மருதாணி
வைத்த என்
கரம் தேனீர்
கொண்டு
கொடுக்கையிலே.....
அதை அவர்
தொட்டு வாங்கும்
வேளையிலே
கிரங்கித்தான்
போவார்
சில வினாடி வரை......
தட புடலாய்
சமையல்
பல பலப்பு
உடையில் நான்
பட படப்புடன்
என் மாமன்........
அப்பாவி மாமனே
இவை தப்பாய்ப்
போச்சே..........
அச்சம் மடம் நாணம்
கொண்ட
பெண் ஒருத்தி
கம்பிரமாய்
நடை போடையிலே
நெஞ்சை
நிமிர்த்து நிற்க
வேண்டிய
நீயோ ஒதிங்கி
இருக்கலாமோ.......