என் காதல் சொல்ல

நெடுநாள் என்னோடு பேசி பழகியவள்
நெடுநெடு வென என்னோடு வளர்ந்தவள்
நெடுஞ்சாலை யாம் வெறித்தோடிய என்னை சட்டென
நெருங்கி வந்து நெருடி சென்றுவிட்டாளே!

நெருப்பை காதல் ஜோதியாய் என்னுள் மூட்டிவிட்டாளே- அவளின்
விருப்பை அறிய விழைந்து நான் காதலை உரைக்க விரைந்து - அதனால்
செருப்பை கையில் எடுத்து அவள் தம்
மறுப்பை காட்டி விடுவாளோ? என்னவளின்
வெறுப்பை பெற்ற பாவியாகி விடுவேனோ?

சொல்லாத காதலே என்றென்றும்
பொல்லாத பாவம் என சொல்வார்கள்

வேண்டாம் எனக்கு இந்த கோழை பட்டம்
கேளாய் என் மனவாளியே ஒரு காதல் திட்டம்

என்னுள் ஆலமரமாய் வேரூன்றிய காதலை
உன்னுள் விதய செய்து
என் நேசமெனும் வாடை காற்றில்
உன் மனதை உறைய செய்து
நம்முள் இருக்கும் இடைவெளியை
பனிபோல் கறைய செய்து
உன் கன்ன தாமரையை
என் கைகளில் எடுத்து
உன் சிகை பட்டுனூல்களில்
என் விரல்களை புதைத்து
உன் நாசிகள்
என் மூச்சை சுவாசித்து
உன் உதடுகள்
என் சுவடுகளை தேடும் அந்நேரம்
உரைப்பேன் என் காதலை உன்னிடம்
என் மனதை கீறிய மின்னல்கீற்று நீதான் என்று!

எழுதியவர் : ஜெகதீஷ் (20-Jan-15, 6:27 pm)
Tanglish : en kaadhal solla
பார்வை : 671

மேலே